வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த நிலையில் , அவரது வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மதவாச்சி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில்
தோல்வியில் முடிந்த முயற்சி
இந்நிலையில் அவர் இன்று திங்கட்கிழமை (22) விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்றநிலையில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.