மன்மதன்
சிம்பு நடிப்பில் இயக்குனர் முருகன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மன்மதன். இப்படத்தில் இரட்டை வேடத்தில் சிம்பு நடித்திருப்பார். மேலும் ஜோதிகா, கவுண்டமணி, சிந்து துலானி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று வரை சிம்பு ரசிகர்களுக்கு மனதை கவர்ந்த திரைப்படங்களில் மன்மதன் படமும் ஒன்று.
நடிகர் பாலகிருஷ்ணா
இப்படத்தில் சிந்து துலானியுடன் நெருக்கமான காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாலகிருஷ்ணா. இந்த காட்சி நெட்டிசன்களால் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.
இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மன்மதன் படத்தில் நடித்த நடிகரா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..