இந்த ஒரு காரணத்திற்காக திர்ஷாவிற்கு ஆணாக மாற ஆசை!

திரிஷா
லியோ படத்திற்கு பின்பு தமிழ் சினிமாவில் திரிஷா பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் தக் லைப் போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.

பேட்டி
இந்நிலையில் நடிகை திரிஷா பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் , “எனக்கு எப்போதுமே ஒரு சின்ன ஆசை இருக்கு, அது என்னவென்றால் ஒரு நாளைக்காவது ஆணாக இருக்க வேண்டும் என்று”.

“ஒரு பையனாக இருப்பது எப்படி, அவர்களின் உடல் அமைப்பு, அவர்களின் மனநிலை பற்றி தெரிஞ்சிக்கணும் ஆசை இருக்கிறது. இது தொடர்பாக நான் என்னுடைய அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன்” என்று திரிஷா தெரிவித்துள்ளார்.