நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சில மாதங்களுக்கு முன்பு Nicholai Sachdev என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
பல வருட காதலுக்கு பிறகு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயம் நடைபெற்றது. வரலட்சுமி காதலர் உடன் வெளியிட்ட புகைப்படங்களும் வைரல் ஆனது.
திருமணம் எங்கே?
தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரண்டு குடும்பங்களும் செய்து வருகிறார்களாம். வரும் ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதற்கு முன்பு சென்னை நட்சத்திர ஹோட்டலில் மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. திருமணம் முடிந்து சென்னை திரும்பிய பிறகு வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நட்சத்திர ஹோட்டலில் நடத்த இருக்கின்றனர் என்றும் தகவல் வந்திருக்கிறது.