சமந்தா
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக பல கோடி செலவில் நடைபெற்றது.
நான்கு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் தங்களுடைய விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களுடைய பிரிவு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
விவாகரத்துக்கு பின்
விவாகரத்து சமயத்தில் நாகசைதன்யா குடும்பத்தில் இருந்து நடிகை சமந்தாவிற்கு ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாகவும், நடிகை சமந்தா அதனை வாங்க மறுத்ததாகவும் செய்தி ஒன்று உலா வந்தது.
இதனை பற்றி பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா, ரூ. 250 கோடி ஜீவனாம்சம் கொடுப்பதாக கூறி ஒரு செய்தியை தூங்கி எழுந்தபின் பார்த்து வருத்தப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் எப்போது வருமான வரித்துறையினர் வந்து கேட்டால் என்னிடம் எதுவுமே இல்லை என அவர்களிடம் காட்டுவதற்காக காத்திருந்தேன் என நகைச்சுவையாக பேசியிருந்தார்.
இது பழைய தகவலாக இருந்தாலும் தற்போது மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.