நடிகர் கூல் சுரேஷ் வாரம்தோறும் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதை பார்த்துவிட்டு வித்தியாசமாக செய்தியாளர்களிடம் விமர்சனம் கூறி பாப்புலர் ஆனவர்.
மேடைகளில் எதாவது செய்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிய அவர். அதன் பின் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அந்த ஷோவுக்கு பிறகு மீண்டும் பழையபடி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
கார் கிப்ட் கொடுத்த பிரபலம்
இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷுக்கு சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் RR தமிழ்செல்வன் ஒரு கார் கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார்.
பிரபல நடிகராக இருக்கும் கூல் சுரேஷ் ஆட்டோவில் வருவதாக சொன்னதும் அவர் தன்னிடம் இருந்த காரை கொடுத்துவிட்டாராம்.
அதற்காக கூல் சுரேஷ் அவருக்கு மாலை போட்டு நன்றி கூறி இருக்கிறார்.