வனிதா மகனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்

பிரபல இயக்குநரின் மகள், வனிதா மகனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபு சாலமன்

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின்னர் இயக்குநராக மாறியவர்களில் ஒருவர் தான் இயக்குநர் பிரபு சாலமன்.

இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதன் பின்னர் கிங், லீ, லாடம், தொடரி, கயல் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சாலமன் இயக்கிய படங்களில் மைனா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து பிரபு சாலமன் விக்ரம் பிரபுவை வைத்து “கும்கி” படத்தை இயக்கினார். இதுவும் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சை எடுத்து கொடுத்தது.

கிராமங்களில் இருக்கும் நடைமுறை அப்படியே படங்களில் காட்டுவதில் இவர் பிரசித்திப் பெற்றவராக பார்க்கப்படுகிறார்.

வனிதா மகன் நடிக்கும் முதல் படம்

இந்த நிலையில், இயக்குனரான பிரபு சாலமன் மகள் ஹேசல் ஷைனி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறார்.

சாலமன் அவர்கள் தன்னுடைய சொந்த மகளையும் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரியை வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்கவுள்ளாராம்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரின் படங்களில் நடிக்கும் நடிகர்கள் புது முகங்கள் என்றாலும் மக்கள் மத்தியில் அவர்களின் உணர்வுகளை பட வழியாக கொண்டு செல்வதில் சாலமன் வள்ளவர் என்பதால் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.