ஜி. வி. பிரகாஷ்
வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி. வி. பிரகாஷ். முதல் படத்திலேயே தனது இசையின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இதன்பின் கிரீடம், பொல்லாதவன், ஆடுகளம், அங்காடி தெரு, மதராசபட்டினம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்கள் மூலம் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
இசையமைப்பாளராக வலம் வந்த ஜி.வி பிரகாஷ் டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் களமிறங்கினார். இதன்பின் சர்வம் தாளமயம், பேச்சுலர், நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
சொத்து மதிப்பு
கடந்த 2013ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு அழகிய குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் தான் ஜி. வி. பிரகாஷ் தனது விவாகரத்தை அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் இசையமைப்பாளரும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ. 75 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.