முக்கிய சீரியலை அவசரமாக முடிக்கும் விஜய் டிவி

டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுகொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்துகின்றன. அதே நேரத்தில் ரேட்டிங் குறைவாக வரும் தொடர்களையும் அவசர கதியில் முடிக்கின்றனர்.

சமீபத்தில் சன் டிவியில் டாப்பில் இருந்த எதிர்நீச்சல் சீரியலை முடித்து, அந்த நேரத்தில் வேறொரு சீரியலை ஒளிபரப்பி வருகிறது.

மோதலும் காதலும்
இந்நிலையில் விஜய் டிவியின் ஒரு முக்கிய சீரியலும் விரைவில் முடிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த வருடம் தொடங்கப்பட்டு, இன்னும் 300 எபிசோடுகள் கூட தொடாத மோதலும் காதலும் சீரியலின் கிளைமாக்ஸ் தான் விரைவில் வர இருக்கிறதாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.