சீரியல் முடிந்த பின்பும் எதிர்நீச்சல் வீட்டிற்கு சென்ற பிரபலங்கள்!

எதிர்நீச்சல்
கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பில் தயாரான தொடர் எதிர்நீச்சல்.

குணசேகரன் என்ற ஆணாதிக்க எண்ணம் கொண்டவரிடம் சிக்கிய அவரது வீட்டிப் பெண்களை சுற்றிய கதையாக எதிர்நீச்சல் இருந்தது.

ஆரம்பத்தில் பயத்தில் அடங்கி இருந்த பெண்கள் எதிர்நீச்சல் போட்டு எப்படி சாதனை செய்கிறார்கள் என்று கதையின் இறுதி காட்சியாக இருந்தது.

ஆரம்பம் பெரிய எதிர்ப்பார்ப்புடன் தொடங்கப்பட்டாலும் கிளைமேக்ஸ் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் கொஞ்சம் வீக்கான கிளைமேக்ஸ் ஆக இருந்தது.

வைரல் போட்டோஸ்
கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் முடிவுக்கு வர தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் நடந்த வீட்டிற்கு தொடர் நடிகர்கள் வந்துள்ளனர்.

காரணம் இயக்குனர் திருச்செல்வம் நினைவுப் பரிசை எதிர்நீச்சல் சீரியலில் நடித்த அனைவருக்கும் வழங்கி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.