சிறகடிக்க ஆசை
மீனா காணாமல் பேன கதைக்களம் மிகவும் எமோஷ்னலான காட்சிகளுடன் முடிந்துவிட்டது. முத்து, மீனாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதும் விஜயாவிற்கு நன்றாக புரிந்திருக்கும்.
இன்றைய எபிசோடில் ரோஹினி பிளாக் மெயில் செய்யும் நபர் மனோஜ் கடைக்கு வருகிறார். வழக்கம் போல் பணம் கேட்ட ரோஹினி கடையில் இருந்த சில பொருள்களை கொடுத்து அனுப்புகிறார்.
இந்த விஷயத்தை பார்த்த ரோஹினியிடம், மனோஜ் சுத்தமாக பணம் வாங்காமல் எப்படி பொருள்களை கொடுத்தாய் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார், இதனால் ரோஹினி ஷாக் ஆகி நிற்கிறார்.
அடுத்த கதைக்களம்
எபிசோட் கடைசியில் சிட்டியிடம் ரோஹினி சென்று தன்னை மிரட்டுபவரை கொஞ்சம் மிரட்ட வேண்டும் என கூற அவரும் ஓகே என்கிறார். சிட்டி மிரட்டும் போது அவர் எப்படியோ தப்பித்து ஓட வழியில் ஒரு பாட்டியை ஆக்டிடன்ட் செய்துவிட்டு வேகமாக பைக் ஓட்டி செல்கிறார்.
அந்த வழியாக சென்ற முத்து அவனை விரட்டி பிடிக்க செல்கிறார், சிட்டியும் இன்னொரு பக்கம் துரத்துகிறார்.
கடைசியில் சிட்டி அவனை ஏதாவது செய்துவிட்டு முத்துவை மாட்டிவிடு போகிறார், ரோஹினியால் முத்துவிற்கு பெரிய பிரச்சனை வரப்போகிறது என ரசிகர்களே எபிசோட் பார்த்ததும் ஒரு கதை எழுதிய வைரலாக்கி வருகிறார்கள்.