கனடாவின் அரசியல்வாதிகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பூரண புரிதலுடன் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வழிகளில் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அண்மையில் புலனாய் பிரிவினர் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநாடுகளுக்கு உதவுவதானது நெறிமுறை மீறல் எனவும் இது சட்ட விரோதமானது எனவும் என் டி பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.
கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு கமிட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் வெளிநாட்டு அரசாங்கத்திற்கு உதவியதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.