தனுஷ்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் தற்போது ராயன் திரைப்படத்தை இயக்கி, அதில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் இம்மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென அடுத்த மாதத்திற்கு ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
சேகர் கம்முலா இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சம்பளம்
இந்த நிலையில், நடிகர் தனுஷின் தற்போதைய சம்பளம் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஒரு படத்திற்கு 50 நாட்கள் கால்ஷீட் மட்டுமே கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்
அதன்படி, ஒரு படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி சம்பளம் என்ற கணக்கில், 50 நாட்கள்ளுக்கு ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.