ரம்யா கிருஷ்ணன்
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளை மனசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மற்றும் இந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வந்தார். பின் ரஜினியின் படையப்பா படத்தின் மூலம் வில்லியாக பட்டையை கிளப்பினார்.
ரம்யா கிருஷ்ணன் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது படையப்பா நீலாம்பரி மற்றும் பாகுபலி ராஜமாதா கதாபாத்திரங்கள் தான். படையப்பா படத்திற்கு பின் கடந்த ஆண்டு மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பயணித்து வரும் ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ. 98 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.