முதுகு வலி தாங்க முடியலையா? இதனை செய்து பாருங்கள்!

பொதுவாக தற்போது இருக்கும் நவீன காலக்கட்டத்தில் முதுகு வலி பிரச்சனை பலருக்கும் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக உட்கார்ந்து கொண்டே நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இது கண்டிப்பாக இருக்கும்.

தினமும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதற்கான உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

வலி அதிகமானால் உடலில் வேறு விதமான பிரச்சினைகளை உண்டு பண்ணி விடும்.

ஆங்கில முறைப்படி மருந்துவில்லைகளை எடுத்து கொள்வதிலும் பார்க்க யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் வலியை கட்டுபடுத்தினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

அந்த வகையில் முதுகு வலியுள்ளவர்கள் என்ன மாதிரியான பயிற்சிகள் செய்வதால் முதுகு வலியை கட்டுபடுத்த முடியும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

முதுகு வலிக்கு நிவாரணம் தரும் யோகாசனங்கள்
1. புஜங்காசனம்
முதலில் தரையில் குப்புறப் படுத்து கால்கள் இரண்டையும் ஒன்றாக இணைத்தப்படி வைத்து கொள்ளவும்.
உங்கள் இரு கைகளின் உள்ளங்கைகளையும் தோள்பட்டைக்கு பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து கைகளை ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தப்படி உடலை மேலே உயர்த்தி, பின்புறமாக வளைக்கவும்.
இந்த நிலையில் இருக்கும் போது கைகள் இரண்டும் மடக்காமல் நேராக இருப்பது அவசியம். அதே வேளை அடிவயிறு தரையில் படுமபடி இருக்க வேண்டும்.
இந்த ஆசனத்தில் சரியாக 10-15 நொடிகள் இருக்கவும்.
கடைசியாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டு மெது மெதுவாக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
இந்த ஆசனத்தை 3-4 தடவைகள் சரி செய்ய வேண்டும். இப்படி செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

2. பாலாசனம்
பாலாசனம் செய்வதற்கு முதலில் முழங்காலிட்டு பிட்டத்தின் மேல் பார்த்தப்படி அமர்ந்து கொள்ளவும்.
உங்கள் கால் பெருவிரல்கள் ஒன்றின் மீது ஒன்று இருக்கும் படி பார்த்து கொள்ளவும்.
இதன் பின்னர் மூச்சை உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் மேல் நோக்கி நேராக உயர்த்தவும்.
மூச்சை வெளிவிட்டவாறு முன்னோக்கி மெதுவாக குனிந்து, நெற்றியை தரையில் படும் வகையில் வைக்கவும்.
இந்த நிலையில் சரியாக 2 2 நிமிடம் வரை இருக்கவும்.
ஆசனத்தை சாதாரணமாக சுவாசித்துக் கொண்டே செய்யலாம்.
தினமும் காலையில் பாலாசனத்தை 4-5 முறை செய்யலாம். இப்படி செய்வதால் பலன் நிச்சயம் கிடைக்கும்.