லண்டனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அநுர குமார திஸாநாயக்க வழமை போன்று பேரூந்துகள் மூலம் மக்களை கூட்டிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை கூறினார்.
இலங்கையர்களுக்கு களங்கம்
இதன் காரணமாக அதில் கலந்து கொண்ட இலங்கை சமூகத்தின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட மக்களுக்கு இலவச பயண வசதி மற்றும் உணவு வழங்கி அவமானப்படுத்தப்பட்டதாகவும் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு இதன்போது லண்டன் மக்களிடையே விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தையும் ஊடகங்களுக்குக் காட்டிய சமன் ரத்னபிரியா, இது லண்டனில் கண்ணியத்துடன் வாழும் இலங்கையர்களின் பெருமைக்குக் களங்கம் என்றும் சுட்டிக்காட்டினார்.