ஒரே வாரத்தில் மகாராஜா பட வசூல் நிலவரம்

தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாக துவண்டு கிடந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்து வெளிவந்த படங்கள் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றன.

மகாராஜா
அதனை முதல் திரைப்படமாக பிரேக் செய்தது அரண்மனை 4. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவின் கம் பேக் ஆக அமைந்தது. இதை தொடர்ந்து ஸ்டார், கருடன் ஆகிய படங்கள் மக்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டது.

மேலும் கடந்த வாரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா உலக தரத்தில் உள்ள திரைக்கதையுடன் வெளிவந்து தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

வசூல்
விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் புதிய சாதனைகளை படைத்து வரும் மகாராஜா திரைப்படம் வெளிவந்து 7 நாட்களை கடந்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் இப்படம் உலகளவில் ரூ. 58 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.