நெல்சன் திலீப்குமார்
கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன் திலீப்குமார். இப்படத்திற்கு முன் சிம்புவை வைத்து இவர் வேட்டை மன்னன் எனும் திரைப்படம் இயக்கினார். அப்படம் பாதியிலேயே ட்ராப் ஆகிவிட்டது.
கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் எனும் மாபெரும் வெற்றியை கொடுத்தார். இதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் பீஸ்ட், சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் நெல்சன் கைகோர்த்த ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. இதை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக வேளைகளில் இறங்கியுள்ளார் நெல்சன். மேலும் கவினின் படத்தையும் தயாரித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் நெல்சனின் சொத்து மதிப்பு ரூ. 20 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் பேசப்பட்டு வருவது மட்டுமே, இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.