சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரெட் சீரியலாக இப்போது உள்ளது சிறகடிக்க ஆசை தொடர்.
அண்ணாமலை-விஜயா என்பவர்களுக்கு மனோஜ், முத்து, ரவி என 3 மகன்கள் உள்ளனர்.
3 பேருக்குமே திருமணம் ஒவ்வொரு விதமாக நடந்தது, அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை பற்றி கதைக்களமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரம் ஒரு தனி ரூம் கட்டும் விஷயம் தான் பேசப்படுகிறது, ஆனால் பிரச்சனை எப்போது முடியும் என தெரியவில்லை.
ஸ்பெஷல் தகவல்
ரூம் கட்டுவது குறித்து வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வர இப்போது ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது.
அதாவது விஜய் தொலைக்காட்சியில் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு தொடர் 2 மணி நேரம் ஸ்பெஷலாக ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறகடிக்க ஆசை ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளதாம்.
View this post on Instagram