வெங்கல் ராவ்
திரையுலகில் தனது வாழ்க்கையில் ஸ்டண்ட் கலைஞர் ஆக துவங்கியவர் வெங்கல் ராவ். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கும் டூப் போட்டு நடித்துள்ளார்.
ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் பொழுது ஏற்பட்ட எலும்பு முறிவுகள் காரணமாக ஸ்டண்ட் செய்வதில் இருந்து விலகி நடிகராக தனது திரை பயணத்தை துவங்கினார்.
செயலிழந்து கை, கால்
வடிவேலுவுடன் இணைந்து இவர் செய்த பல நகைச்சுவை காட்சிகள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. நகைச்சுவையில் நம்மை சிரிக்க வைத்த நடிகர் வெங்கல் ராவ் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியுள்ள வீடியோவில் “என் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது. என்னால் நடக்க முடியவில்லை. பேச முடியவில்லை. சினிமா தொழிலாளர்கள், சினிமா நடிகர்கள் இந்த வெங்கல் ராவ்வுக்கு உதவி செய்யுங்கள். மருத்துவ சிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லை. இதுக்கு என்னால் பேச முடியவில்லை. எனக்கு உதவி பண்ணுங்க” என கேட்டு கொண்டுள்ளார்.