பிரித்தானிய இளவரசி வைத்தியசாலையில் அனுமதி!

இளவரசி அன்னே சிறு காயங்கள் மற்றும் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் மாலை, குளோசெஸ்டர்ஷையரில் உள்ள Gatcombe Park எஸ்டேட்டுக்கு அவசர உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்த இளவரசி அன்னேக்கு அவர்கள் முதலுதவி அளித்தபின், அவரை சவுத்மீட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இளவரசிக்கு என பிரச்சினை என பக்கிங்காம் அரண்மனை வட்டாரம் தெரிவிக்காத நிலையில், சம்பவ இடத்தில் குதிரைகள் நின்றதால், அவரை குதிரை மிதித்திருக்கலாம் அல்லது ஏதோ ஒரு வகையில் குதிரையால் அவர் காயமடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இளவரசி ஆனுக்கு தலையில், மற்றும் பிற சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பிரிஸ்டலிலுள்ள சவுத்மீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் விரைவில் நலமடைவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் இளவரசி ஆன்னே, தடை தாண்டி குதிரையோட்டும் விளையாட்டில் செம்பியன் என்பதும், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட முதல் ராஜ குடும்ப உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.