100 கோடியை நெருங்கும் மகாராஜா வசூல்!

மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – இயக்குனர் நித்திலன் கூட்டணியில் உருவாகி கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மகாராஜா.

நித்திலன் இயக்கத்தில் இதற்கு முன் குரங்கு பொம்மை திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. விமர்சன ரீதியாக இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

இதை தொடர்ந்து தற்போது இயக்கியுள்ள மகாராஜா திரைப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வசூல்
இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 92 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என கூறுகின்றனர்.