சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 28 வயது முன்னணி நடிகை.

சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தான் தனது அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தை முடித்த கையோடு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே. 23 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த சமயத்தில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக இணையும் ஜோடி
டான் திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்ரவத்தி. இவர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் தான் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறாராம். ஏற்கனவே டான் திரைப்படத்திலும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.