இந்தியன் 2
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 வருகிற ஜூலை 12வெளியாகவுள்ளது.
இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். லைக்கா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
அண்மையில் இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தின் வியக்கவைக்கும் பட்ஜெட் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாம்.
மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல்காட்சிக்கு மட்டும் ரூ.30 கோடி செலவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.