கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மிரட்டலான இயக்குனருடன் இணையும் சூரி

சூரி
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கருடன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம்மை வியக்க வைத்திருந்தார். கருடன் படத்திற்கு பின் சூரிக்கு தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வருகிறதாம். அதில் சிறந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கிறாராம் சூரி.

மிரட்டலான கூட்டணி
இந்த நிலையில், அடுத்ததாக சூரி நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்து வெளிவந்துள்ள தகவலில், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் உடன் இணையவிருக்கிறாராம். இவர் இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு விலங்கு எனும் வெப் தொடர் வெளிவந்திருந்தது.

விமல் ஹீரோவாக நடித்திருந்த இந்த வெப் தொடர் இதுவரை இந்தியளவில் வெளிவந்த வெப் தொடர்களில் சிறந்த ஒன்றாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இந்த விலங்கு வெப் தொடரின் வெற்றியை தொடர்ந்து தற்போது சூரியிடம் கதை சொல்லி ஓகே செய்துள்ளாராம் பிரசாந்த் பாண்டியராஜ்.

சூரி மற்றும் பிரசாந்த் பாண்டியராஜ் இணையவிருக்கும் படம் குறித்து படக்குழுவிடம் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.