மகாராஜா படம்
நடிகர் விஜய் சேதுபதி, எல்லா நடிகர்களும் ஒவ்வொரு டிரண்ட் உருவாக்க இவரும் தனி பாதையில் பயணித்து வருகிறார்.
சிறந்த கதாபாத்திரம் உள்ளதா எந்த நடிகரின் படமாக இருந்தாலும் நடிப்பேன் என அசத்தி வருபவர். அண்மையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா படம் வெளியாகி இருந்தது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இந்த படத்தில் நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பட வசூல்
கடந்த ஜுன் 14ம் தேதி வெளியாகிய இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற வசூலிலும் கலக்கி வருகிறது.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்படமாக அவருக்கு அமைந்துள்ளது.