ஷங்கர்
லைகா நிறுவனம் நிறைய பெரிய பட்ஜெட் படங்கள் தயாரித்துள்ளார்கள். அப்படி அவர்களது தயாரிப்பில் வரும் ஜுலை 12ம் தேதி வெளியாகப்போகும் படம் தான் இந்தியன் 2.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது.
இன்றைய அரசியல் சூழலில் இந்தியன் தாத்தா திரும்பி வந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே இந்தியன் 2 உருவான பின்னணி என்று படத்தின் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த படம்
இந்தியன் 2 படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்தடுத்த 3 படங்களின் விவரத்தை தெரிவித்துள்ளார்.
ஒன்று ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படத்தை இயக்க வேண்டும், அடுத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஒரு படம், மற்றொன்று SciFi கதைக்களத்துடன் ஒரு படம் அந்த படத்தை 2012 என்ற பெயரில் உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இந்த 3 படங்களுக்கும் மிகப்பெரிய பொருட் செலவும், நிறைய VFX காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்று கூறியுள்ளார்.