நடிகை மாளவிகா
தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் நிறைய நடிகைகள் சினிமாவில் அறிமுகமானார்கள்.
அப்படி 1999ம் ஆண்டு வெளியான உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதன்பின் மீண்டும் அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார்.
ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கதிர்வேலா, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தார்.
அதன்பின் அவர் கவர்ச்சியில் இறங்க பட வாய்ப்புகளும் குறைந்தன. இவர் கடந்த 2007ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார், இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.
நடிகையின் பேட்டி
இந்த நிலையில் நடிகை மாளவிகா மேனன் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், எனக்கு 2007ம் ஆண்டு திருமணம் ஆனது, 2008 வரை நடித்துக் கொண்டிருந்தேன்.
நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்று நினைக்கவே இல்லை, திருமணத்திற்கு பிறகும் நான் நிறைய படங்களில் கமிட்டாகி இருந்தேன். அப்போது நான் கர்ப்பமாக, கமிட்டான படங்களின் அட்வான்ஸ் எல்லாம் திருப்பிக் கொடுத்துவிட்டேன்.
இதனால் தான் என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என கூறியிருக்கிறார்.