ப்ரீ புக்கிங்கில் இந்தியன் 2 செய்துள்ள வசூல்

இந்தியன் 2
2024ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் வருகிற 12ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

சமீபத்தில் தான் இப்படத்திலிருந்து ட்ரைலர் வெளிவந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதுவும் கமல் ஹாசனின் கடின உழைப்பு ட்ரைலரில் இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்றால், திரையில் கண்டிப்பாக பட்டையை கிளப்பி இருப்பார் என ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

வசூல்
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே உலகளவில் ரூ. 2.25 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் வட அமெரிக்காவில் ரூ. 1.65 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.