விஜய்
தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் தான் விஜய்யின் கடைசி படம் என சொல்லப்படுகிறது. இதற்குப்பின் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளாராம். நடிகர் விஜய்க்கு 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
சொத்து மதிப்பு
இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இந்தநிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, அவருடைய மொத்த மதிப்பு ரூ. 400 கோடி இருக்கும் என கூறுகின்றனர். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.