அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதிதி ஷங்கர். இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஆவார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது.
அடுத்த படம்
இந்த நிலையில், ஆகாஷ் முரளியை தொடர்ந்து அவரது அண்ணன் நடிகர் அதர்வாவிற்கும் ஜோடியாக நடிக்கப்போகிறாராம் அதிதி ஷங்கர். இப்படத்தை பிரபல இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கவுள்ளார். இவர் இயக்கத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி, ஒரு கல் கண்ணாடி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.