விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் பிரபலம் ஆனவர் வித்யுத் ஜம்வால். அவர் பாலிவுட்டில் ஹீரோவாகவும் தற்போது நடித்து வருகிறார். மேலும் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் SK23 படத்தில் வில்லனாக அவர் நடித்து வருகிறார்.
அவர் சொந்த தயாரிப்பில் கடந்த வருடம் IB71 மற்றும் இந்த வருடம் Crakk ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.
அந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. அதனால் வித்யுத் ஜம்வாலுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
சர்க்கஸில் வேலை செய்கிறாரா
வித்யுத் ஜம்வால் சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது சர்க்கஸ் ஒன்றில் சேர்ந்து பணியாற்றி வருகிறார் என இணையத்தில் செய்தி பரவி வருகிறது.
அதை கிண்டல் செய்து வித்யுத் ஜம்வால் இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார். “அந்த சர்க்கஸ் அட்ரஸ் இருந்தால் எனக்கு அனுப்புங்கள். அங்கே சென்று பார்க்கிறேன்” என கூறி இருக்கிறார் அவர்.
அதனால் அந்த செய்தி முற்றிலும் வதந்தி தான் என்பது உறுதியாகி இருக்கிறது.
View this post on Instagram