பொதுவாக வெளியில் அதிகம் செல்பவர்களுக்கு முகம் அடிக்கடி கருப்பாக மாறும்.
இதனை தடுப்பதற்கு பலர் செயற்கை முறையில் முயற்சி செய்வார்கள்.
மாறாக வீட்டிலேயே எளிய முறையில் சரும கருமையை நீக்கப் பல வழிகள் உள்ளன.
அதில் முக்கியமானதாக அரிசி கழுவிய நீரை பயன்படுத்தல் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் அரிசி கழுவிய நீரை எப்படி பயன்படுத்தினால் வெள்ளையாவார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அரிசி கழுவிய நீரின் பயன்பாடுகள்
1. அரிசி நீர் என்பது சருமத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய் அகற்றும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இயற்கையாகவே இந்த நீரில் மாவுச்சத்து உள்ளது. அழுக்குக்களை இல்லாமலாக்கி முகத்தை பளபளப்பாக மாற்றும்.
2. அரிசி நீரில் உள்ள அமிலத்தன்மை இறந்த சரும செல்களை மெதுவாக வெளியேற்றும். இந்த செயல்முறை தோல் அமைப்பை மேம்படுத்தில் செல் உருவாக்கத்தை ஊக்கப்படுத்தும்.
3. முகத்தை முகப்பொலிவாக்கும் ஆற்றல் அரிசி தண்ணீருக்கு உள்ளது. இதிலுள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும்.
4. அரிசி நீரில் நீரேற்றம் பண்புகள் உள்ளன. இது சருமத்திற்கு தேவையான இயற்கையான ஈரப்பதத்தை வழங்குகின்றது. அத்துடன் மிருதுவாகவும் மென்மையாகவும் முகத்தை மாற்றும் தன்மை கொண்டது.
5. தோல் பராமரிப்பு மட்டுமல்லாது முடி ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. முடி இழைகளை வலுப்படுத்தவும், நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றது.