மனைவிக்காக சிவகார்த்திகேயன் செய்த செயல்

மனைவிக்காக சிவகார்த்திகேயன் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படுகிறது.

சிவகார்த்திகேயன்

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டில் பிரபலமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது.

சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயனுடைய பெயர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கு முக்கிய காரணம் இமான் என்றும் சொல்லாம்.

மனைவிக்காக செய்த செயல்

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சினிமாவை போல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 மில்லியனுக்கு மேல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பின்தொடர்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் பின் தொடரும் ஒரே நபர் அவரின் மனைவி ஆர்த்தியை தான்.

சிவகார்த்திகேயன் செய்த இந்த செயல் ரசிகர்கள் உட்பட பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இமான்- மனைவி சர்ச்சையில் இருந்து மீண்டெழ முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயனின் இந்த செயல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.