வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) ருமேனியா (Romania) மற்றும் போலந்து (Poland) நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த விஜயமானது16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயங்களின் போது, வெளிவிவகார அமைச்சர் பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர்
இதேவேளை, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் புதிய இலங்கைத் தூதரகத்தை (Embassy of Sri Lanka) வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர்
இதேவேளை, ருமேனியா தலைநகர் புக்கரெஸ்டில் புதிய இலங்கைத் தூதரகத்தை (Embassy of Sri Lanka) வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
மேலும், அங்கு 2023 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தனது தூதரக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.