இன்றைய தங்க நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (16) செவ்வாய்க்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,650 ரூபாவாக உள்ளது.

அதேபோல , 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 197,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,750 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 182,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.