வனிதா விஜயகுமார் விரைவில் 4 ஆவது திருமணம் செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவில் படங்கள் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்தடுத்து 2 திருமணங்கள் செய்து சர்ச்சை நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
இது ஒரு புறம் இருக்கையில் மகளை எப்படியாவது வெள்ளத்திரையினுள் அனுப்பி விட வேண்டும் பல முயற்சிகள் செய்தும் வருகிறார்.
இப்படியொரு நிலையில், வனிதா விரைவில் 4 ஆவது திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.