பொதுவாக நாம் அனைவருமே பழங்கள், காய்கறிகளை தோல் நீக்கி தான் சாப்பிடுவோம்.
மீதமுள்ள அந்த தோலினை தூர போட்டு விடுவோம். அல்லது வெட்டியவுடனே குப்பையில் போட்டு விடுவோம்.
மாறாக உண்மையாக சொல்லப்போனால் நாம் தூர போடும் அந்த தோலில் அதிகமான நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அந்த வகையில், தர்ப்பூசணி பழம் சாப்பிட்டால் அதன் தோலை தூக்கி போட்டு விடுவோம்.
நாம் தூக்கி போடும் தர்ப்பூசணி தோலை வைத்து முகத்திற்கு பொலிவு கொடுக்கலாம். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தர்பூசணி பழ தோல்
தர்பூசணி பழ தோலில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளன. இது செரிமான பிரச்சினையால் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கிறது. அத்துடன் உடலில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
எடை இழப்பிற்கு தர்ப்பூசணி தோலில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உதவுகிறது.
மேலும், தர்ப்பூசணியில் கலோரிகள் அதிக அளவில் இருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாத்து கொள்கிறது.
தர்ப்பூசணி சாப்பிட்டால் தூக்கம் வரும் என்பார்கள். ஏனெனின் தர்பூசணி தோலில் உள்ள மெக்னீசியம் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள், தர்பூசணி தோல்களை சாப்பிடலாம்.
தோலுக்கு செய்யும் நன்மைகள்
தர்பூசணி தோலில் லைகோபீன், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்டுகள் இருக்கின்றன. இது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
முகத்தில் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் இருந்தால் அவற்றை நீக்கி பளபளப்பாக வைத்து கொள்ளும்.
தர்பூசணி தோல்களைத் சருமத்தில் தேய்த்து வந்தால் இளமையாகவே இருக்கலாம்.
எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம்?
முதலில் தர்பூசணி பழத்திலிருந்து தோலை தனியாக எடுத்து கொள்ளவும். பின்னர் தோலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதனை ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
இந்த கலவையுடன் Ice Cube Tray -யில் ஊற்றி freezer ல் சில மணி நேரம் வைக்கவும்.
சில மணிநேரங்களில் ஐஸ் கட்டியாகி விடும். அதனை முகத்திற்கு apply செய்து மசாஜ் செய்ய வேண்டும்.
சரியாக 10 – 15 நிமிடம் வரை மசாஜ் செய்த பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதன்படி, தினமும் செய்து வந்தால் முகம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.