இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான டி இமான் தனது அம்மா குறித்து பேசிய விடயங்கள் வைரலாகி வருகின்றது.
டி இமான்
இசையமைப்பாளர் டி இமான் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோனிகாவை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2020 நவம்பர் மாதம் விவாகரத்து செய்துள்ளார்.
இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான் என்று பரபரப்பாக பேசப்பட்டதுடன், டி இமானும் இதனை ஓபனாக பேசியிருந்தார்.
பின்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவர் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் நிலையில், தனது தாய் குறித்து பேசிய சில விடயங்கள் வைரலாகி வருகின்றது.
அம்மா குறித்து டி இமான்
டி இமான் தனது தாய் குறித்து பேசுகையில், தனது அம்மா கடைசியாக தனது இசையில் தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் படத்தினை வீல் சேர் மூலமாக பார்க்க வந்தார்.
அப்பொழுது எனது அம்மா தனது கையை இறுக்கி பிடித்துக்கொண்டு சூப்பராக இசையமைத்திருப்பதாக கூறியது தற்போதும் என்னால் மறக்கமுடியவில்லை.
ஸ்டூடியோவில் அம்மாவின் புகைப்படத்தினை வைத்திருப்பதாகவும், தனது அம்மாவும், தானும் ஒரே மாதிரியாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
தான் ரெக்காடிங் வேலையில் இருந்த போது தனது அம்மா இறந்துவிட்டார். இதனை தனது தந்தை தன்னிடம் கூறவில்லை. வேலை முடித்து வந்த பின்பு தான் கூறினார்.
இதனைக் கேட்ட நான் உடைந்து அழுதுவிட்டேன். பின்பு அம்மாவின் புகைப்படத்தின் முன்பு நின்று, அம்மா ஏன் எனக்கு மட்டும் இதெல்லாம் நடக்கிறது என்று கேட்டு இருக்கிறேன்.
நீங்கள் இருந்திருந்தால், எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடந்து இருக்காது என்று சொல்லி இருக்கிறேன். நீங்கள் ஒரு வேளை இங்கு இருந்திருந்தால், எனக்கு நடந்த இந்த விஷயங்களை, நீங்கள் தட்டிக் கேட்டிருப்பீர்களே என்று கதறி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சிலர் நமது வாழ்க்கையில் இல்லை என்றால் அது இல்லை தான். அவர்களுக்கு நிகராக அந்த இடத்தை யாராலும் நிரப்பமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.