அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நெதன்யாகு

இஸ்ரேலிய (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்காவுக்கு (USA) விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச ஊகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விஜயத்தை நாளை மறுதினம் (24) அவர் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பிரதமர் நெதன்யாகு வொஷிங்டனில் (Washington) அமெரிக்கக் காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவார் எனவும், ஜனாதிபதி ஜோ பைடனை (Joe Biden) சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கத் தலைநகர்
இந்தநிலையில், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்க்கும் செயற்பாட்டாளர்கள் அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் அன்றையதினம் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில், பெருமளவானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.