ஹிமாசலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

முதல்வர் சுகவிந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்குர் உள்பட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

ஹிமாசலப் பிரதேச விதான்சபா தலைவர் குல்தீப் சிங் பதானியா புதிதாகத் தேர்வான எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

டெஹ்ரா சட்டமன்ற தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கமலேஷ் தாக்கூர், நலகர் தொகுதியிலுந்து ஹர்தீப் சிங் பாவா மற்றும் ஹமீர்பூர் தொகுதியில் பாஜக உறுப்பினர் ஆஷிஷ் சர்மா ஆகியோர் பதவியேற்ற உறுப்பினர்கள் ஆவர்.

மூன்று எம்.எல்.ஏக்கள் பதவியேற்ற நிலையில், 68 உறுப்பினர்களுடன் அவை நிரம்பியது. அதில் காங்கிரஸின் பலன் 40 ஆகவும், பாஜகவின் பலம் 28 ஆகவும் உள்ளது. ஹிமாலப் பிரதேச வரலாற்றில் ஹிமாச்சலப் பிரதேச வரலாற்றில் முதல்முறையாக விதான்சபாவில் சுயேச்சை எம்எல்ஏக்கள் இல்லை.

மேலும், முதல்வர் சுகு மற்றும் அவரது மனைவி கமலேஷ் தாக்குர் தம்பதியினர் ஒரே அவையில் உறுப்பினர்களாக இருப்பது இதுவே முதல் முறை.

மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களான ஹோஷியார் சிங், கே.எல். தாக்கூர் மற்றும் ஆஷிஷ் ஷர்மா ஆகியோரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, டேஹ்ரா, நலகர் மற்றும் ஹமீர்பூர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.