இந்தியா தமது 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்கும் ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ளது.
அதன்படி நேபாளம் மற்றும் சீஷெல்ஸ் போன்ற அண்டை நாடுகளுக்கு இணையாக இலங்கைக்கும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அதிகரிப்பு கிடைத்துள்ளது .
இந்தியாவின் 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் முன்வைத்தார்.
அதில் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உதவித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் . இலங்கைக்கு இந்திய ரூபாவில் 95 கோடி அதிகப்படியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.