சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, விலைகள் குறைக்கப்பட்ட பொருட்களை நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
விலைக்குறைப்பின்படி, சதொச பால் மா 400 கிராம் பொதியின் முந்தைய விலை 950 ரூபாவாகவும் புதிய விலை 910 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பு
ஒரு கிலோ பாசிப்பயரின் முந்தைய விலை 998 ரூபாய் – புதிய விலை 965 ரூபாய், ஒரு கிலோ வெண்டைக்காய் முந்தைய விலை 978 ரூபாய் – புதிய விலை 950 ரூபாய்.’
ஒரு கிலோ இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் முந்தைய விலை 305 ரூபாய் – புதிய விலை 285 ரூபாய்.
ஒரு கிலோ கொண்டைக்கடலையின் முந்தைய விலை 455 ரூபாய் – புதிய விலை 444 ரூபாய்.
ஒரு கிலோ கோதுமை மாவின் முந்தைய விலை 190 ரூபாய் – புதிய விலை 185 ரூபாய்.
ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 263 ரூபாய் – புதிய விலை 258 ரூபாய்.
ஒரு கிலோ வெள்ளை அரிசியின் முந்தைய விலை 204 ரூபாய் – புதிய விலை 199 ரூபாய்.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் முந்தைய விலை 190 ரூபாய் – புதிய விலை 185 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.