வீடே மணக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு…

கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு எவ்வாறு செய்வது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கியமாக இருக்கும் உணவு கருவாடு ஆகும். அதிலும் கிராம புறங்களில் வைக்கப்படும் கருவாடு குழம்பை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.

நல்லெண்ணெய் ஊற்றி சமைக்கப்படும் கருவாடு குழம்பிற்கு ருசி தனி தான். தற்போது கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
கருவாடு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 25 (நறுக்கியது)
தங்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 15
புளி – சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் இவற்றினை சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மிளகாய், மல்லி, மஞ்சள் தூள்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு இதனுடன் புளிகரைசலை விட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். மற்றொரு புறம் கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் கருவாடை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

குழம்பு நன்றாக கொதித்ததும், வறுத்து வைத்திருக்கும் கருவாட்டை எண்ணெய்யுடன் குழம்பில் சேர்க்கவும்.

தற்போது சுவையான கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு தயார்.