விவாதத்தில் நண்பனை குத்தி கொன்ற நபர் கைது!

இந்தோனேசியா நாட்டில் கோழி முதலில் வந்ததா? அல்லது முட்டை முதலில் வந்ததா? புதிரின் விவாதத்தின் போது தனது நண்பரை கத்தியால் குத்தி கொன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தன்று கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பரான கதிர் மர்கஸை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்று அவர் மார்கஸிடம் கேட்கிறார்.

இந்த விவாதம் கைகலப்பாக மாறியதில் கதிர் மார்கஸ் விவாதம் செய்ய விரும்பவில்லை மற்றும் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர், ஆத்திரத்தில் மார்க்ஸை கத்தியால் குத்திக் கொன்றார்.

இந்த கொலை குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், கைது செய்யப்பட்ட நபருக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கியதற்காக நண்பர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் இதுபோன்ற அற்ப காரணங்களுக்காக கொலைகள் அதிகரித்துள்ளன.