விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படத்தில் தனக்கு தெரியாமல் ஒரு நிமிட காட்சியை சேர்த்து இருக்கிறார்கள் என இயக்குனர் விஜய் மில்டன் புகார் கூறி இருந்தது சர்ச்சை ஆனது.
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இடையே இருக்கும் பிரச்சனை வெட்டவெளிச்சமான நிலையில், அதன் பிறகு நடிகர் சரத்குமார் சமரசம் பேசி அந்த ஒரு நிமிட காட்சியை படத்தில் இருந்து நீக்கினார்கள்.
அது நான் இல்லை
இந்நிலையில் விஜய் ஆண்டனி இந்த சர்ச்சை பற்றி ஒரு பதிவை போட்டிருக்கிறார். அந்த இரண்டு நிமிட காட்சியில் வருவது நான் அல்ல என கூறி இருக்கிறார்.
“அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை” என அவர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.