காட்டு யானை தாக்கிப் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஹதுவாகம பகுதியில் யானை தாக்கியதில் மேற்படி குடும்பஸ்தர் காயமடைந்து நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அம்பகஹவெவ, நொச்சிகம பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர் தனது தோட்டத்தை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.