சீரியல்கள்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் டாப்பில் கலக்கும் தொலைக்காட்சிகள் என்றால் அது சன் மற்றும் விஜய் டிவி தான்.
இரண்டு தொலைக்காட்சிகளுக்கு பிறகு சீரியல்களில் டாப் வரும் டிவி என்றால் அது ஜீ தமிழ்.
இந்த தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், அண்ணா, மாரி, நினைத்தாலே இனிக்கும் என பல தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
புதிய என்ட்ரி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம்.
இந்த தொடரில் சன் டிவியின் எதிர்நீசசல் தொடரில் கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கிய விமல் என்ட்ரி கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் சூப்பர் அட்டகாசமாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.