உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் யோகா

“யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.”

ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம்.

உடலின் உயர் ரத்த அழுத்தத்தில் யோகாசனம் எந்த அளவில் பங்கு வகிக்கிறது என்பதே இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

யோகா
வஜ்ராசனம் இது யோகாவில் ஒரு சிறந்த எடுத்துகாட்டு. இதை செய்வதன் மூலம் உடல் பருமனை கட்டு்ப்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

இது இரண்டு கால்களின் பாத விரல்கள் ஒன்றன் மீது ஒன்று பதிந்துள்ள நிலையில் நேராக அமரவேண்டும்.

பாதங்களின் உட்பகுதியில் புட்டங்கள் தொட்டுக்கொண்ட நிலையில் அமரவேண்டும். இவ்விரண்டு நிலைகளிலும் சுவாசம் ஒன்றுபோலதான் இருக்கும்.

இடுப்பிலிருந்து பாதம் வரை செல்லும் வஜ்ரநாடி அழுத்தப்படுவதால் இந்த ஆசனத்தை வஜ்ராசனம் என்று அழைக்கிறார்கள்.

ஷவாசனா- இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போவதற்காக செய்யப்படுவது, இதனால் இரத்த ஓட்டம் சீராக வேலை செய்யும். இதற்கு படுத்திருக்க வேண்டும்.

ஜானு சிர்சாசனா- இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும். இந்த யோகா ஆசனம் உடல் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துகிறது, நிலையான இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது.

பிராணயாமா- உயர் இரத்த அழுத்தத்திற்கான பிரமாரி பிராணயாமா என்று அழைக்கப்படும் இந்த யோகா ஆசனம், உங்கள் உடல் முழுவதும் நல்ல அதிர்வுகளை பரப்புகிறது.

சிறுநீரக சிக்கல்கள் இருப்பவர்கள் இந்த சேது பந்தசனா யோகாவை செய்யலாம். இதை தவிர உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

உங்கள் இடுப்பை உயர்த்தி, உங்கள் கால்களை அழுத்தி, உங்கள் முதுகெலும்பை நீட்டவும்.

30-60 விநாடிகள் வைத்திருங்கள், உங்கள் குளுட்ஸை அழுத்தி ஆழமாக சுவாசிக்கவும். ஒரு நேரத்தில் ஒரு முதுகெலும்பை மெதுவாக கீழே இறக்கி, உங்கள் முதுகில் ஓய்வெடுக்கவும்.

இப்படி செய்தால் ரத்த ஓட்டம் சீராக வேலை செய்யும்.

பாஸ்ச்சிமோத்தானாசன – உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.