சோபிதா துலிபாலா
கடந்த 2013 -ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் கலந்துக் கொண்டு அழகிப் பட்டத்தை தட்டி சென்றவர் தான் சோபிதா துலிபாலா.
இதன் மூலம் இவருக்கு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2016 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த ராமன் ராகவ் 2.0 படத்தில் தான் ஹீரோயினாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் இளவரசி வானதியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சொத்து மதிப்பு
நடிகர் நாக சைதன்யாவை டேட்டிங் செய்து வந்த சோபிதா, நேற்று அவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலா சொத்து விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு வெறும் 7 முதல் 10 கோடி தான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 1 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.